'கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் கொடுக்கணும்'... முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா இரண்டாவது அலை காரணமாகப் பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கூடுதல் கால அவகாசம் கேட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரி பன்னிரண்டு மாநில முதலமைச்சர்களுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்துமாறு இந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொண்டுள்ளதையும் இந்த கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார் முதல்வர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெவ்வேறு தன்மைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில முதல்வர்கள் ஒன்றிணைவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து கோடி ரூபாய் வரை கடன் நிலுவை வைத்துள்ள சிறு கடனாளர்களுக்கு ஆறு மாதம் அவகாசம் தர வேண்டும் என்று குறிப்பிட்டார். இதுதொடர்பாக கேரளா, ஓடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஸ்டாலின் நல்லா தான் ஆட்சி பன்றாரு, ஆனா'... 'ஏங்க இதெல்லாம் ஒரு வழக்கா'?... வழக்கு போட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி கிளைமாக்ஸ்!
- ‘தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு ரத்து’!.. மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும்..? முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
- தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு!.. தளர்வுகள் என்ன?.. எவை இயங்கும்? எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே!
- 'மாஸ்க்' போடாமல் நின்றுக்கொண்டிருந்த தம்பதி...! 'அவங்கள பார்த்த உடனே காரை நிறுத்த சொல்லி...' - முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்...!
- தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி... உச்சகட்ட எதிர்பார்ப்பு!.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன்... முதல்வர் ஸ்டாலின் அவசர மீட்டிங்!
- சிபிஎஸ்இ-க்கு ரூட் க்ளியர்!.. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு உண்டா? இல்லையா?.. முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்!
- அடையார் ஆனந்த பவன் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி !
- ‘ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது’!.. ‘விரைவில் முற்றுப்புள்ளி’.. தமிழக மக்களுக்கு முதல்வர் முக்கிய உரை..!
- 'அத்தியாவசிய பொருட்களுக்கு பாதிப்பு இருக்காது'... 'தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு'... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
- பூதாகரமான லட்சத்தீவு விவகாரம்!.. மௌனம் கலைத்த முதல்வர் ஸ்டாலின்!.. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?