'English-ல் சரளமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்'.. அடுத்தடுத்து வச்ச கோரிக்கைகள்.. வியந்த பிரதமர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்று சென்னையில் நடைபெற்ற நலத்திட்ட துவக்க விழாவில் ஆங்கிலத்தில் அசரவைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

பிரதமரின் சென்னை பயணம்

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைத்ததற்கு பிறகு முதன் முறையாக நேற்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர். சென்னையில் பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை பெற்ற மாநிலமாகும். ஊரக சுகாதார கட்டமைப்பு, கல்வி நிலையங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பெண்களுக்கான அதிகாரம், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் சமூக நீதியின் மண்ணாக தமிழகம் அறியப்படுகிறது. இதையே திராவிட மாடல் என்று அழைக்கிறோம்" என்றார்.

கோரிக்கை

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கோரிக்கைகளையும் முன்வைத்தார். அதில்," கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவது ஆகியவற்றில் மாண்புமிகு பிரதமர் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர்,"தமிழ்நாடு இந்தியாவின் வளர்ந்த மாநிலமாகும். தேசிய பொருளாதாரத்தை தொடர்ந்து முன்னேற்ற பாதைக்கு எடுத்துச்செல்ல தமிழகம் பாடுபடும். ஆகவே, உங்களது ஒத்துழைப்பு என்றென்றும் இருந்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதன்படி அதிக நிதி மற்றும் நலத்திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கிடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நவீன தமிழகத்தின் தந்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியதுபோல உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற அடிப்படையில் செயல்பட்டுவருகிறோம். ஒன்றிய அரசுடன் இணக்கமாக செயல்பட்டாலும் எங்களுடைய உரிமைகளை பெற தொடர்ந்து குரல்கொடுப்போம்" என்றார்.

பிரதமர் மோடி கலந்துகொண்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

MKSTALIN, NARENDRAMODI, STALIN, SPEECH, CHENNAI, ஸ்டாலின், மோடி, சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்