'தப்பு செஞ்சா தப்பிக்க முடியாது'... 'ஆன்லைன் வகுப்புகள் மீதான புகார்'... முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தவறிழைப்போர் தப்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரத்தில் சிக்கிய வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஆன்லைன் வகுப்பு முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.  அதில், மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்பு குறித்த புகார்களை அளிக்க அதிவிரைவில் ஹெல்ப் லைன் எண் அறிமுகம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இணைய வகுப்புகளில் முறையற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், மாணவ- மாணவிகள் கொடுக்கும் புகார்களின் கீழ் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்