The Elephant Whisperers : ஆஸ்கர் வென்ற இந்திய பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி போஸ்ட்.. !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டின் முதுமலையில் எடுக்கப்பட்ட The Elephant Whisperers குறும்படம் ஆஸ்கரை வென்றுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | Oscars 2023 : ஆஸ்கார் மேடையில் ஆரவாரம் .. அசரவெச்ச RRR நாட்டு நாட்டு பாடல்..! வைரலாகும் வீடியோ

ஆஸ்கர் 2023

சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் The Elephant Whisperers சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

The Elephant Whisperers

தமிழ்நாட்டின் முதுமலையை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் யானைகளை பராமரித்து வரும் பொம்மா மற்றும் பெல்லி என்ற தம்பதியினரின் வாழ்க்கை முறை, யானையுடனான அவர்களது பிணைப்பு குறித்து அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பிரிவில் போட்டியிட்ட மற்ற நான்கு படங்கள் ஹால்அவுட், தி மராத்தா மிட்செல் எபெஃக்ட், ஸ்ரேன்ஜர் அட் த கேட் மற்றும் ஹவ் டு யூ மெசர் ய இயர் ஆகியவை ஆகும். இதில் The Elephant Whisperers வென்று வாகை சூடியுள்ளது. அதுமட்டும் இன்றி முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்ற இந்திய குறும்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள். அப்போது மொத்த அரங்கமும் அவர்களுக்கு உற்சாகமாக ஆர்ப்பரித்தது. இதனிடையே இருவருக்கும் பல்வேறு திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் வாழ்த்து

இந்த சூழ்நிலையில், The Elephant Whisperers படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்தியத் தயாரிப்பில் முதன்முதலில் ஆஸ்கார் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததை விட சிறந்த செய்தி இல்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த படம் அனைத்து பாராட்டுதல்களுக்கும் தகுதி வாய்ந்தது எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Also Read | Naatu Naatu : ஆஸ்கார் விருது பெற்ற பின்.. MM கீரவாணி பாடிய பாடல்.. வீடியோ..!

MKSTALIN, CM STALIN, THE ELEPHANT WHISPERERS, THE ELEPHANT WHISPERERS DIRECTORS, OSCAR 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்