'சின்ன தப்பு செஞ்சாலும் அவ்வளவுதான்".. எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறிய தவறு கூட செய்யக்கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "உங்க ஏரியா-ல மின்சாரம் துண்டிப்பா? இத மறக்காம செய்யுங்க".. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!

சென்னை கலைவாணர் அரங்கில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 21 மாநகராட்சிகளின் மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று அறிவுரை வழங்கினார்.

வாய்ப்பு

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் "மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா அறிவுறுத்தியபடி மக்களோடு இருங்கள் மக்களுக்காக இருங்கள். உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு பலருக்கும் கிடைத்துவிடாது. இந்த வாய்ப்பினை வீணாக்கி விட வேண்டாம். மக்களிடையே நம்பிக்கையை பெற்று அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இளம் பிரதிநிதிகள் மற்றும் புதிய பிரதிநிதிகள் பொறுப்பிற்கு வந்துள்ளீர்கள். இதனை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக உணருங்கள்" என்றார்.

அறிவுரை

தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பணியாற்றியதை குறிப்பிட்டுப் பேசிய ஸ்டாலின் "நான் நேராக பொறுப்பேற்றவுடன் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டுவந்த நடைமுறைகளை மாற்றினேன். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றினேன். மக்கள் வழங்கியிருப்பது பதவி அல்ல மேயர் பொறுப்பு. இதனை உணர்ந்து பொறுப்பாக பணியாற்ற வேண்டும் என கலைஞர் எனக்கு அறிவுரை கூறினார். இதையேதான் நான் உங்களிடம் அறிவுரையாக முன்வைக்கிறேன்" என்றார்.

தவறு

உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு செய்யக்கூடாது என வலியுறுத்தி பேசிய ஸ்டாலின் "சிறிய தவறு செய்தால் கூட அது மிகப் பெரிய கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்து விடும். ஆகவே மிக கவனமாக பணியாற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் விதிமீறல் ஏற்படாமல் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். மக்கள் சேவையில் மாநகராட்சி. நமது சேவையில் நகராட்சி என்பதே நமது இலக்கு இதனை செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன்" என என்றார்.

Also Read | விண்வெளியில் இதுவரை கண்டுபிடிச்சதுலயே இதுதான் பெருசு.. நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல்..

CM STALIN, ADVISE, MAYOR, PARTY MEMBERS, TAMIL NADU CM, CM MK STALIN, முதல்வர் ஸ்டாலின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்