‘ஊரடங்கில் நிறைய பேர் வெளியே சுத்துராங்க’!.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட ‘முக்கிய’ முடிவு.. முதல்வர் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நடந்த அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்னம், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். மதிமுக சார்பில் சின்னப்பா, பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னதுரை, நாகை மாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,‘ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தடுப்பில் தமிழக அரசின் பணியில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரிசா, மேற்கு வங்காளத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது. சிங்கப்பூர், தைவான் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வரவழைக்கப்படுகிறது. நோய்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்க அரசாணை வெளியிடப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனை அடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது.
2. தொற்று பரவல் காலகட்டத்தில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகளை அனைத்துகட்சிகளும் முற்றிலுமாக நிறுத்துவது.
3. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களை அனைத்து கட்சிகளும் அறிவுறுத்துதல்.
4. தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கலாம்.
5. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது.
இந்த நிலையில் தமிழகத்தில் இனி ஊரடங்கு கடுமையாக கடைப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உயிர் நண்பனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்'... நெகிழ்ந்துபோன உதயநிதி ஸ்டாலின்!
- 'மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசி போதாது'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்'... குவியும் பாராட்டு!
- கொரோனாவுக்கு எதிராக களப்பணியாற்றி 'உயிரிழந்த' மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா '25 லட்சம்' ரூபாய் இழப்பீடு...! - தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!
- 'சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா'... 'முதல்வர் ஸ்டாலின் இத செய்வாருன்னு யாரும் நினைக்கல'... நெகிழ்ந்து போன எம்.எல்.ஏக்கள்!
- கொரோனாவுக்கு எதிரான போரில்... முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!.. மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'அன்று தனது வெற்றிக்காக போராடியவர்'... 'இன்று சபாநாயகர்'... 'அண்ணாச்சியை தெரியாதவங்க யாருமே இல்ல'... யார் இந்த அப்பாவு?
- 'கொரோனா நிவாரண நிதி'... '2000 ரூபாய் எப்போது முதல் வழங்கப்படும்'?... அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- 'பல எம்எல்ஏக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு வந்திருக்கு'... 'தவறு செய்தால்'.... முதல்வர் ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை!
- ‘ஹாலோ ஸ்டாலின் தாத்தா’!.. சுட்டிக்குழந்தை அனுப்பிய ஒரே ஒரு லெட்டர்.. அடுத்தடுத்து ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த முதல்வர்..!
- ஸ்டாலின் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யார்?.. அப்படி என்ன ஸ்பெஷல்?.. அனல்பறக்கும் பின்னணி!!