தமிழகத்திலேயே 'கொரோனா தடுப்பூசி' உற்பத்தி செய்யப்படும்...! 'அதுமட்டுமின்றி, இன்னும் கூடுதல் திட்டங்கள்...' - தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தடுப்பூசிகள் , ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்காக தமிழகத்திலேயே உற்பத்தி நிலையங்களை தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசியை மத்திய அரசு தரப்பில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாநிலங்களும் இதற்கான நடவடிக்கை எடுக்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக, தமிழகம் தரப்பிலிருந்து ஏற்கனவே உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ட சாதனங்கள், ஆக்சிஜன் செறியூட்டிகள், தடுப்பூசிகள் (மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வார்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவாங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் (Joint venture) இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துகளை (Expression of Interest) 31-5-2021-க்குள் கோரியுள்ளது. அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நெஞ்சு பொறுக்குதில்லையே'... '8 கோடி தடுப்பூசி ரெடி'... ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு!
- 'திருமணமான கையேடு புதுமண தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல்'... 'இதுக்கு பெரிய மனசு வேணும்'... குவியும் பாராட்டு!
- இனிமேல் இ-பதிவு முறையில் 'இந்த' காரணத்தை சொல்லி ஊருக்கு போக முடியாது...! ஏன் அந்த பிரிவை நீக்கினோம்...? - விளக்கம் அளித்த தமிழக அரசு...!
- VIDEO: 'கையில் குளுக்கோஸ் பாட்டிலோட... சாலையில் செல்வோரை துரத்திய 'கொரோனா' பேஷன்ட்’.. 'அலறியடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்...!!' - திடீரென நடந்த அந்த டிவிஸ்ட்...!!!
- 'சொல்லி அடித்த முதல்வர் ஸ்டாலின்'... 'நெதர்லாந்திலிருந்து வந்த இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்'... அதிரடி நடவடிக்கை!
- 'வேற வழி இல்ல, 'Work From Home' தான் பாக்கணும்'... 'ஆனா 55 மணி நேரம் வேலை'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
- 'அவசர காலத்துக்கு ரொம்ப பயன்படும்'... 'விற்பனைக்கு வரும் 2டிஜி கொரோனா மருந்து'... இதை எப்படி பயன்படுத்துவது?
- 'எனக்கு வேற வழி தெரியல'... 'கட்டிலோடு மரத்தின் உச்சிக்கு போன இளைஞர்'... 'காரணம் என்ன'?... வைரலாகும் வீடியோ!
- VIDEO: 'தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் ரஜினிகாந்த்...' - சந்திப்பு முடிந்தபின் அவர் பொதுமக்களுக்கு விடுத்த 'ஒரு' வேண்டுகோள்...!
- இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்.. எதற்கெல்லாம் அனுமதி..? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? வெளியான முழு விவரம்..!