'தமிழை விருப்ப மொழியாக்குங்கள்'... 'அதிரடி கோரிக்கை வைத்த முதல்வர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாற்ற, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையின் படி இந்தி பேசாத மாநிலங்களும் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை அனுப்பியிருந்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அத்துடன் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது. 

இதனையடுத்து இரண்டே நாட்களில், புதிய கல்வி வரைவு கொள்கையில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையில் திருத்தம் செய்தது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று, பிரதமர் மோடிக்கு தமிழ் மொழிக்காக கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் 'இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் மொழியை விருப்பமொழியாக அறிவித்தால் உலகின் மிக தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழுக்கு சிறந்த சேவையாக அமையும் என மரியாதைக்குரிய பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

STOPHINDIIMPOSITION, TAMIL, ANCIENTLANGUAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்