‘எந்த ஆரவாரமும் இல்லை’!.. தனியாக நடந்து வந்து எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆரவாரமில்லாமல் சாலையில் நடந்துவந்து முதல்வர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
இதனை அடுத்து கட்சிகள் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். மேலும், கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதல்வர் பழனிசாமி இன்று (15.03.2021) தாக்கல் செய்தார். ஆரவாரம் இல்லாமல் தனியாளாக நடந்து வந்து தனது வேட்புமனுவை எடப்பாடி வட்டாட்சியரிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
கடந்த 1989, 1991, 1996, 2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7-வது முறையாக மீண்டும் எடப்பாடி தொகுதில் போட்டியிடுகிறார். இதில் 4 முறை அவர் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்...' 'எழுவர் விடுதலை...' 'வாரி வழங்கிய எண்ணற்ற சலுகைகள்...' - மலைக்க வைக்கும் அதிமுக-வின் தேர்தல் அறிக்கை...!
- 'அனைவருக்கும் ’விலையில்லா’ வாஷிங்மெஷின்... வீட்டில் ஒருவருக்கு ’அரசு’ வேலை’... ’இன்னும் வியக்க வைக்கும் பல திட்டங்கள்...' - மாஸ் காட்டிய அதிமுக-வின் தேர்தல் அறிக்கை...!
- ‘அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையே நடக்கும் போர்’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் அதிரடி..!
- 'எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து இவரா'?... 'ஆச்சரியத்துடன் நிருபர்கள் கேட்ட கேள்வி'... ஸ்டாலின் சொன்ன நச் பதில்!
- 'துண்டு சீட்டு இல்லாமல், ஒரே மேடையில் விவாதிக்க ரெடியா'?... ஸ்டாலினுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சவால்!
- மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கமல்ஹாசன் போட்டியிடும் 'தொகுதி' அறிவிப்பு...! எந்த கட்சிகளுடன் மோதல்...? - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...!
- ‘திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு’!.. உதயநிதி ஸ்டாலின் களமிறங்கும் தொகுதி எது தெரியுமா..?
- 'பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த 'தினகரன்'... 'அவர் போட்டியிடும் தொகுதி'... வெளியானது அமமுக வேட்பாளர் பட்டியல்!
- 'பல லட்சம் செலவில் கண்டெய்னரில் பணிமனை'... 'தினமும் வீடு வீடாக பிரச்சாரம்'... மொத்த கனவையும் தகர்த்த தொகுதி பட்டியல்!
- #BREAKING: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...!