'கோவை' விசிட்டில் 'தமிழக' முதல்வர் செய்த துணிச்சலான 'காரியம்'.. சபாஷ் போட வைத்த மு.க. ஸ்டாலின்.. குவியும்' 'பாராட்டு'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா மூலம் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றியும், நேரடியாக ஸ்டாலின் பார்வையிட்டு தெரிந்து கொண்டார்.

இதன் ஒரு கட்டமாக, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த கொரோனா வார்டிற்கு சென்று, நோயாளிகளை நேரில் சந்தித்தார். பிபிஇ கிட் அணிந்து சென்ற ஸ்டாலின், அவர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட ஸ்டாலின், விரைவில் நீங்கள் குணமடைந்து வருவீர்கள் என்றும் ஆறுதல் சொன்னதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினுடன், மருத்துவர்கள் சிலரும் உடனிருந்த நிலையில், மாநிலத்தின் முதல்வரே இப்படி தங்களை நேரில் வந்து சந்தித்ததால், அங்கிருந்த நோயாளிகள் நெகிழ்ந்து போயினர். அது மட்டுமில்லாமல், கோவையில் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்த வேளையில், மாநில முதல்வர் இவ்வளவு தைரியமாக களமிறங்கி செய்துள்ள இந்த செயல், நோயாளிகள் மட்டுமில்லாது, முன்களப் பணியார்களிடமும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.



 

அது மட்டுமில்லாமல், முதல்வர் ஸ்டாலினின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்