'அம்மா, முதல்வர் கிட்ட பேசிட்டாங்க'... 'அண்ணே கையெழுத்து போடுறாரு பாருங்க'... 'கான்வாயை நிறுத்திய முதல்வர்'... இணையத்தை கலக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கான்வாயை நிறுத்திய முதல்வர் ஸ்டாலின் செய்த செயல் இணையத்தில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செய்து, மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்த வகையில், கோரிக்கை மனுவோடு சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு ஸ்டாலின் அளித்த உறுதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேனர் கலாச்சாரத்தை, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற தினம் முதல் நாமும் அதைச் செய்யக் கூடாது என, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தி இருந்தார். இதனால், ஸ்டாலினின் சாலைப் பயணங்கள் மிகவும் எளிமையான வகையில் இருந்து வருகிறது.

மேலும் முதல்வர் சாலையில் செல்லும்போது போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் குறைந்த அளவிலான கான்வாய் வாகனங்களுடன் சென்று வருவது பல தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் குறைவான அளவில் இருப்பதால், முதலமைச்சர் ஸ்டாலினை எளிதில் மக்கள் அணுகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் சாலையில் செல்லும்போது சாலை ஓரம் காத்திருந்த பெண் ஒருவர், அவரின் காரினை பார்த்ததும், கைகளில் வைத்திருந்த கோரிக்கை மனுவோடு கார் அருகில் சென்றுள்ளார். அந்த பெண்ணை கண்டதும் டிரைவரிடம் காரினை நிறுத்த சொன்ன முதல்வர் ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.

பின், அவரது கோரிக்கை மனுவை வாங்கி படித்துப் பார்த்த பின், அதில் கையொப்பமிட்டு தனது உதவியாளரிடம் அளித்துள்ளார் ஸ்டாலின். மேலும், மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். அதோடு இல்லாமல், உங்கள் மனு மீது இன்றே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை அந்த பெண்ணின் மகன் வீட்டின் மாடியிலிருந்து வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது அவர்கள் பேசுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது, அம்மா முதல்வர் ஸ்டாலின் காருக்கு அருகில் செல்வார் என நினைக்கவில்லை. தெரிந்திருந்தால் நாமும் போயிருக்கலாம். அவர் மனுவில் கையெழுத்துப் போடுவார் என்றும் நினைக்கவில்லை என அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண் எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி கோரிக்கை மனுவோடு காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை எளிமையாகச் சந்தித்ததும், சந்திப்பின் போது எந்த காவலர்களும் அந்த பெண்ணை தடுக்காமலிருந்த அணுகுமுறையும் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்