ஸ்டாலின் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யார்?.. அப்படி என்ன ஸ்பெஷல்?.. அனல்பறக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலமைச்சரின் செயலாளர்களாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்தான அறிவிப்பு வெளியானதில் இருந்து உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., உமாநாத் ஐ.ஏ.எஸ்., சண்முகம் ஐ.ஏ.எஸ்., அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., ஆகிய நால்வரும் யார் என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது.
உதயச்சந்திரன் குறித்து பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், மற்றவர்கள் குறித்து பெரிய அறிமுகம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
உதயச்சந்திரன் IAS
இவர் நாமக்கல்லைச் சேர்ந்தவர். மிக நேர்மையான அதிகாரி. இவற்றை தாண்டி டெக்னாலஜியை அரசு துறைகளில் கொண்டு வந்தவர். மிக குறைந்த வயதில் ஐ.ஏ.எஸ். ஆன உதயச்சந்திரன், தமிழ் இலக்கியம், கலாச்சாரம் குறித்து அதீத ஆர்வம் கொண்டவர். ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும் இருந்துள்ளார்.
மாணவர்களுக்கான கல்வி கடனை பெருமளவில் அவர்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஊட்டியதோடு, கடன் கிடைக்கச் செய்தவர். 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடக்காத மதுரையின் 3 கிளர்ச்சி கிராமங்களுக்கு தேர்தல் நடத்தி அசத்தியவர்.
ஆனால், டி.என்.பி.எஸ்.சி செயலாளராக 2011ல் நியமிக்கப்பட்ட பிறகு அவர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்தது. அரசு வேலைக்காக அல்லல்பட்டு வேதனையோடு பலர் காத்திருக்க, காசு வாங்கிக் கொண்டு கை காட்டுபவருக்கு வேலை என்ற நிலை கண்டு கொதித்தார்.
அது தொடர்பாக, அனைத்து புகார்களையும் ஆதாரங்களோடு மேலிடத்துக்கு அனுப்பினார். அரண்டு போனார் டி.என்.பி.எஸ்.சி தலைவர். ராஜினாமா செய்ததோடு வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. ஆன்லைன் தேர்வு, ஒருமுறை கட்டணம் என அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை செய்து அசத்தினார்.
அதன் பிறகு, பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்டார் உதயச்சந்திரன். அப்போது அவர் மதிப்பெண் முறையை ஒழித்துக்கட்டினார். பின்னர், தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டார். எனினும், பள்ளிக் கல்வித்துறை தொடர்பான ஆலோசனைகள் அவரிடம் இருந்து பெறப்பட்டது. தொல்லியல்துறைக்கு அனுப்பப்பட்டாலும் கீழடியை (Keezhadi) பெரிதாக்க உதயச்சந்திரனின் முயற்சி அளப்பரியது.
உமாநாத் IAS
தமிழ்நாடு மருந்து பொருள் கழகத்தில் தலைவராக உள்ளார், உமாநாத். மிகவும் ஸ்ட்ரிக்டான யாரிடமும் பெரிதாக பேசாத அதிகாரி என்பார்கள் அறிந்தோர். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. அதனை கோயம்புத்தூர் ஆட்சியராக இருந்து நடத்திக் கொடுத்தவர். மேலாண்மை பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர் என அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் கடந்து இடஒதுக்கீடு குறித்த நீண்ட புரிதல் உள்ளவர். அதனால் தமிழக அரசும் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான மத்திய குழுவுக்கு இவரை அனுப்பியது.
இதற்கிடையே, 2010ல் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பட்டா இல்லாமல் தவித்த மக்களுக்கு பட்டா வழங்கியதால், அவருக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவரது பெயரையே காலனிக்கு மக்கள் வைத்துள்ளனர்.
மேலும், கொரோனா காலத்தில் தேவையான மருந்துகளை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கியது, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கொள்கலன்களை உயர்த்தியது என பல விஷயங்களை திறம்படச் செய்தவர்.
சண்முகம் IAS
பாரத் நெட் டெண்டர் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டிய அதிகாரம் சண்முகம் ஐ.ஏ.எஸ்-இடம் சென்றது. ஆனால், (Bharat Net Tender) அந்த ஒட்டுமொத்த ஏல முறையே தவறு என்று அதற்கு அனுமதி மறுத்தார் சண்முகம். விளைவு, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மிக நேர்மையான அதிகாரி. தஞ்சாவூர் ஆட்சியராக இருந்தவர். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் முதல்வரின் பிரிவில் பணியாற்றியவர்.
அனு ஜார்ஜ் IAS
அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். என்றாலே அரியலூர் மக்கள் கொண்டாடுவார்கள். குறிப்பாக அங்கன்வாடி பணியாளர்கள்.
அதிகாரம் படைத்த சிலரின் ஊழல்களுக்கு துணை போகாத காரணத்தால் இவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் ஆட்சியராக இருந்த அனு ஜார்ஜ் தான் இப்போது முதல்வரின் செயலாளர். அது மட்டுமல்ல, ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து பல உதவி கல்வி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து வழக்கு போட்டு அதிரடி காட்டியவர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இது அமைச்சர் பதவி அல்ல... முள்கிரீடம்!.. கொஞ்சம் மிஸ் ஆனாலும்"... கொரோனா காலத்தில்... சுகாதாரத்துறை மா. சுப்பிரமணியனிடம் கொடுக்கப்பட்டது ஏன்?
- 'உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்த மாஸ்க்'... 'அதிலிருந்த வசனம்'... பதவி ஏற்பு விழாவில் நடந்த சுவாரசியம்!
- அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தவர்களில் எத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம்..? வெளியான விவரம்..!
- பேரறிஞர் அண்ணாவின் 'முழக்கத்தை'... தன்னுடைய 'அடையாளமாக' மாற்றிய 'முதல்வர் ஸ்டாலின்'!.. வேற லெவல் சம்பவம்!
- ‘ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்து’!.. ஒரே டேபிளில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம்.. கவனம் பெறும் போட்டோ..!
- 'முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மு.க.ஸ்டாலின்'... 'முதல்வர் போட்ட முதல் கையெழுத்து'... 5 முக்கிய அரசாணைகள்!
- கலைஞர் சொன்ன ‘அந்த’ வாக்கியம்.. மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ‘முக்கிய’ அறிக்கை வெளியிட்ட சூர்யா..!
- 'இத பார்க்க கலைஞர் இல்லையே'... 'கலங்கி உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் ஸ்டாலின்'... தேற்றிய சொந்தங்கள்!
- "கொரோனாவால் வாழ்வாதாரம் போச்சு"... 'நிதிச்சுமையில் தமிழகம்'... 'சவால்களை எதிர்கொள்ளும் புதிய நிதியமைச்சர்... யார் இந்த பழனிவேல்ராஜன்? - ஆச்சர்ய பின்னணி!!
- ‘கருப்பு சட்டையில் கமல்’!... ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஆச்சர்யம்..! தமிழக அரசியலில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் ‘மக்கள் நீதி மய்யம்’! - என்ன திட்டம் ஆழ்வார்பேட்டை ஆண்டவரிடம்...?