VIDEO: திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி!.. சமயோஜிதமாக செயல்பட்ட இளம்பெண்!.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மயங்கி விழுந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவிய பெண்ணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி சுசீலா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

மூதாட்டியை அவரது மகன் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்தார்.

சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டியைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளையராணி, மூதாட்டியை இரு சக்கர வாகனத்தில் தூக்கி வைத்து பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், மூதாட்டி உயிரிழந்தார்.

இளையராணியின் மனிதநேயமிக்க இந்த செயலை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சேலம் விமான நிலையத்திற்கு அவரை வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர், "வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன்.

இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன்.

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்