1 ரூபாய்க்கு 3 வேளை உணவு.. ஏழை எளியவர்களுக்கு 15 வருஷமா சேவை செய்யும் தம்பதி.. முதலமைச்சரின் உருக்கமான பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோட்டில் ஏழை எளியவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு 3 வேளை உணவு அளித்துவரும் தம்பதியை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
Also Read | அறுவை சிகிச்சையை மறைத்த மணமகன்.. அதிர்ந்துபோன மணப்பெண்.. 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..!
பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பதை சங்க இலக்கியங்கள் துவங்கி சான்றோர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். அந்த வகையில் ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகே உணவகம் ஒன்றை நடத்திவரும் தம்பதி 1 ரூபாய்க்கு உணவை அளித்துவருகின்றனர். இன்று நேற்றல்ல கடந்த 15 ஆண்டுகளாக இந்த தம்பதியினர் இச்சேவையை செய்து வருகின்றனர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.
ஏழை மக்களுக்கு
ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகமே உணவை வழங்கி வருகிறது. ஆனால், நோயாளிகளுடன் தங்கியிருக்கும் நபர்கள் வெளியில் தான் உணவு தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதற்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 150 ரூபாய் வரையில் செலவாகும். இது ஏழை மக்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும் என கருதி வெங்கட்ராமன் என்பவர் தனது உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு உணவை வழங்க முடிவெடுத்திருக்கிறார்.
3 வேளையும்
இதன்படி காலை மற்றும் மாலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும் 1 ரூபாய்க்கு வழங்க அவர் முடிவெடுத்திருக்கிறார். அதன்படி கடந்த 15 ஆண்டுகளாக அதேபோல செய்தும் வருகிறார். இதன்மூலம் ஒருநாளைக்கு சுமார் 50 பேருக்கு உணவளித்து வருகிறார் வெங்கட்ராமன். அதுமட்டும் அல்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு 20 சதவீத தள்ளுபடியில் உணவை வழங்கும் இவருக்கு துணையாக இருக்கிறார் இவரது மனைவி. இந்நிலையில், இதுபற்றி அறிந்த தமிழக முதல்வர் இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
வாழ்த்து
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்;
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளில்.. திறக்கப்படாத வீட்டுக் கதவு.. "உள்ள போய் பாத்ததும்"... மணமக்களை பார்த்து அலறிய அக்கம் பக்கத்தினர்
- வெளிநாட்டுக்கு டூர் போன தம்பதி.. திரும்பி வந்ததும் காத்திருந்த கடிதம்.. "நாங்க வெளியூர்'ல இருக்குறப்போ இது எப்படி நடந்துச்சு??"
- உடனடியா அந்த பட்டியலை ரெடி பண்ணுங்க.. 15 நாள் டைம்.. MLA-களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்.. முழுவிபரம்.!
- "தெருவுல நிக்கிறேன்.. உதவி பண்ணுங்க".. முதல்வருக்கு கண்ணீருடன் பாட்டி வச்ச கோரிக்கை.. அடுத்த நாளே ஸ்பாட்டுக்கு போன அதிகாரிகள்.. நெகிழ வைக்கும் பின்னணி..!
- "105 குழந்தைங்கள வளக்கணும்".. அலாதி பிரியத்தால் தம்பதியர் எடுத்த முடிவு.. 22 குழந்தைங்க பிறந்ததும் திடீர்ன்னு நடந்த 'ட்விஸ்ட்'!!
- "இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம்".. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி ட்வீட். முழு விபரம்..!
- கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்.. காதலியை கரம்பிடித்த வாலிபர்.. இதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் பலரையும் திகைக்க வச்சிருக்கு..!
- "டெய்லி ரூ.10 லட்சம் வர லாபம் பார்க்கலாம்.." குடும்பமாக போட்ட பகீர் பிளான்.. திடுக்கிட வைக்கும் மோசடி!!
- பசியுடன் இருந்த கர்ப்பிணி பெண்.. "ஆசையா Sandwich ஆர்டர் பண்ணி, பார்சல தொறந்து பாத்தா" உள்ளே காத்திருந்த 'அதிர்ச்சி'
- "6 வருஷமா என்ன பிரச்சனைனு கூட தெர்ல".. அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி முதல்வருக்கு வச்ச கோரிக்கை.. அடுத்தநாளே அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!