உடனடியா அந்த பட்டியலை ரெடி பண்ணுங்க.. 15 நாள் டைம்.. MLA-களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்.. முழுவிபரம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளின் பட்டியலை அனுப்பிவைக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | ரயில்வே பிளாட்பார்மில் வந்த தகராறு.. மனைவி தூங்குறவரை காத்திருந்து கணவர் செஞ்ச பயங்கரம்.. CCTV கேமராவை பார்த்து உறைந்துபோன அதிகாரிகள்..!

கடிதம்

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து சட்டப்பேரவையில் கடந்த மே 7 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக முதல்வர் பேசியிருந்தார். இந்நிலையில், இதனை செயல்படுத்தும் விதமாக  சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் முதல்வர்.

அதன்படி அந்தந்த தொகுதிகளில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் முக்கியமான 10 கோரிக்கைகளை தேர்ந்தெடுத்து அனுப்பிவைக்க ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அந்த கடிதத்தில்,"சில தேவைகள் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அதனை செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம்.  இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

15 நாட்களுக்குள்

சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மக்களின் தேவைகளை கண்டறிந்து அவற்றுள் முக்கியமான 10 கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் அளிக்கும்படி ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். பட்டியலில் உள்ள கோரிக்கைகள் முன்னுரிமையின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். குடிநீர், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள், சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் அடங்கிய பட்டியலை மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறும் ஸ்டாலின் கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிரைவேற்றப்படும் எனவும் மாவட்டங்களுக்கு இடையே உள்ள சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு இத்திட்டம் பங்களிக்கும் என்றும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also Read | "தெருவுல நிக்கிறேன்.. உதவி பண்ணுங்க".. முதல்வருக்கு கண்ணீருடன் பாட்டி வச்ச கோரிக்கை.. அடுத்த நாளே ஸ்பாட்டுக்கு போன அதிகாரிகள்.. நெகிழ வைக்கும் பின்னணி..!

MKSTALIN, DMK, CM MK STALIN, MLA, CM MK STALIN ORDERS MLA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்