நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை விவகாரங்களில்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!.. சூழலியலார்கள் வரவேற்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அப்போது சூழலியல் சார்ந்த அவருடைய அறிவிப்புகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில், "நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான். அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு நான். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.
கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், தோழமை கட்சிகளுக்கும் நன்றி.
பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்து ஆண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். துளி அளவும் சந்தேகம் வேண்டாம்.
இரு தினங்களாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் விவாதத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களின் கருத்தை நான் அறிவுரையாக எடுத்துக் கொள்கிறேன்.
5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதை கவர்னர் உரையில் சொல்லி விட முடியாது; கவர்னர் உரை ஒரு டிரைலர் தான்.
தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம்; தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச் சாலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்குமா?.. நடக்காதா?.. எடப்பாடி பழனிசாமி கேள்வி!.. பிரதமருடன் நடந்த உரையாடலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
- 'தொடர்ந்து சொல்லுவோம், திரும்ப திரும்ப சொல்லுவோம்'... 'பாஜக உறுப்பினர் கேட்ட கேள்வி'... முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்!
- 'BE படிச்சிட்டு வேலை பாக்குறேன்'... 'வாங்குற சம்பளம் இதுக்கே போகுது'... 'போன வருஷம் வீடியோ காலில் வச்ச கோரிக்கை'... இன்று அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
- தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை... 'புதிய தளர்வுகளுடன்' ஊரடங்கு நீட்டிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே!
- 'துபாய் போகும்போது அம்மா கூட'... 'ஆனா திரும்பி வரும்போது'... 'கையெடுத்து கும்பிட்ட தந்தை'.... விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
- 'முதல்வர் ஸ்டாலினுடன் டெல்லி சென்ற மனைவி துர்கா ஸ்டாலின்'... 'கவனம் பெற்ற பயணம்'... பின்னணியில் இருக்கும் காரணம்!
- '25 நிமிடத்தில்... 30 கோரிக்கைகள்'!.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்... பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் என்ன?
- 'ச்சே, என்னா மனுஷன் சார்'... 'பாட்டியை போட்டோ எடுத்த கையேடு போட்டோகிராபர் செய்த செயல்'... நெகிழவைக்கும் சம்பவம்!
- 'கோரிக்கை மனுவோடு இருந்த 2 பவுன் தங்க சங்கிலி'... 'நெகிழ்ந்துபோன முதல்வர் ஸ்டாலின்'... பொறியியல் மாணவிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
- 'அம்மா, முதல்வர் கிட்ட பேசிட்டாங்க'... 'அண்ணே கையெழுத்து போடுறாரு பாருங்க'... 'கான்வாயை நிறுத்திய முதல்வர்'... இணையத்தை கலக்கும் வீடியோ!