கல்யாணம் முடிஞ்சு வரும்போது கண்கலங்கிய மனைவி.. முதல்வர் முக ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தம்முடைய 70 ஆவது பிறந்த நாளை வரும் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடுகிறார்.

                                Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வராக இருந்த திமுக மூத்த தலைவர் கலைஞர். மு.கருணாநிதியின் மகன் ஆவார். கலைஞரின் மறைவுக்கு பின், திமுக கட்சிக்காக செயல்பட்டு வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து மக்கள் குறித்த பல பிரச்சனைகளில் நேரடியாக களத்தில் இறங்கி அதனை சரி செய்வதிலும் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார். தனது பள்ளிக்காலம் குறித்தும், திருமணம் குறித்தும் நிறைய கருத்துக்களையும் அவர் சுவாரஸ்யத்துடன் பகிர்ந்திருந்தார்.

அப்போது தனக்கு இளம் வயதில் திருமணம் நடந்தது பற்றி பேசி இருந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், 22 வயதில் திருமணம் ஆனதை குறிப்பிட்டு பேசுகையில், "எங்க வீட்ல பாத்தீங்கன்னா எல்லாருமே குறுகிய காலத்தில் திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. திருமணம் முடிந்து மூணாவது மாசத்துல எமர்ஜென்சி வந்துருச்சு.


Images are subject to © copyright to their respective owners

முன்னாடி எனக்கு பெண் கொடுக்க எல்லாருமே ரொம்ப யோசிச்சதும் உண்டு. ஆனா திருவெண்காட்டில அவங்க வந்து முரசொலி மாறனோட தூரத்து சொந்தம். ஜெயராம் என்பவர் தலைவர் மேல் தீவிர வெறி பிடித்தவராக இருந்தார். திருவெண்காடு ஸ்கூல்ல தலைமை ஆசிரியராக இருந்த ஜெயராமன் தான், தலைவரோட வீட்டுல சம்பந்தம் பண்ணனும்ன்னு விரும்பினார்.

மயிலாடுதுறையில் என்னோட மாமாவோட பையனுக்கு கல்யாணம் நடக்குதுன்னு அப்ப நாங்க எல்லாரும் போயிருந்தோம். அப்போ வீட்டுல பெரியவங்க எல்லாம் போய் பொண்ண பார்த்துட்டு வந்தாங்க. அடுத்த நாளே என்ன கூட்டிட்டு போய்ட்டாங்க. நான் பார்த்தது ஒரே ஒரு பொண்ணு தான். அதுதான் முடிவு ஆச்சு, அவங்கள தான் கல்யாணம் பண்ணினேன்.

Images are subject to © copyright to their respective owners

கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவங்க சைடுல இருந்து பெண் அழைப்பு ரிசப்ஷன் வச்சிருந்தாங்க. அந்த பங்க்ஷன் முடிஞ்சு வரும்போது குடும்பத்தில் இருந்து வரும்போது பொண்ணுங்க அழுவாங்கல்ல, அப்போ என்னோட மனைவியும் குடும்பத்துல எல்லாரையும் பிரியுறோம்ன்னு கண் கலங்கி அழுதாங்க.

நான் அப்போ ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன் 'இன்னும் அழ வேண்டியது எல்லாம் நிறைய இருக்கு. இங்கேயே அழாதேன்னு' சொன்னேன்" என தனது திருமண நேரத்தில் நடந்த விஷயங்களை பற்றி முக ஸ்டாலின் பேசி இருந்தார்.

MKSTALIN, DURGA STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்