உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து வீடு வழங்கும் ஆணையை வழங்கிய முதல்வர் முக.ஸ்டாலின்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின்.
Also Read | 70 வயது நபரின் மனைவிக்கு 19 வயசு.. "வாக்கிங் போன இடத்தில் பாட்டு பாடி இம்ப்ரஸ் பண்ண 50'ஸ் கிட்..
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா. இவர் மாவட்ட மற்றும் மாநில அளவில் கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.
இளம் வீராங்கனையாக இருந்த பிரியாவுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கால் அகற்றப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இளம்பெண் பிரியா உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலில் கட்டு போடும் போது அதனை அழுத்தமாக மருத்துவர்கள் கட்டியதால் மாணவி பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் பாதிப்புக்கு உள்ளானது.
இது பாதிப்பை ஏற்படுத்தியதால், மிகப் பெரிய அளவில் அவதிப்பட்ட மாணவி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே உன்னிப்பாக பிரியாவை மருத்துவர்கள் கவனித்து வந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதய பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதனிடையே, அவரது கால்களையும் மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி காலை 7:15 மணிக்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
பெரியார் நகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பதும் தெரிய வந்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் சகோதரி ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், இலவச வீடு வழங்கும் ஆணையையும் அவர் பிரியாவின் பெற்றோரிடம் அளித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Also Read | உலகின் 800 வது கோடி குழந்தை.. பிறந்தது எங்கே?.. பெயர் என்ன?? இணையத்தில் வைரலாகும் தகவல்!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெற்றோரிடம் ஷ்ரத்தா பேசிய கடைசி வார்த்தைகள்.. நாட்டையே உலுக்கிய கோரம்.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!
- "ஃபீல் பண்ணாதீங்க, மாஸ் என்ட்ரி குடுப்பேன்".. உயிரிழப்பதற்கு முன் மாணவி வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்.. மனதை ரணமாக்கும் சோகம்!!
- கால்பந்து வீராங்கனை மரணம்.. மருத்துவர்களின் கவனக்குறைவு தான் காரணமா?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!!
- "ஐயா..".. சாலையில் உருக்கமாக கத்திய பெண்.! சட்டென காரை நிறுத்தி விசாரித்த முதல்வர் போட்ட நெகிழ்ச்சி உத்தரவு.!
- "போர்களில் எல்லாம் வெற்றிமுரசு கொட்டிய மும்முடிச்சோழன்".. ராஜராஜ சோழரின் சதயவிழா.. வைரலாகும் முதல்வர் முக.ஸ்டாலினின் ட்வீட்..!
- மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு..!
- இளம் மகனை விபத்தில் பறிகொடுத்த அதிர்ச்சியில் பெற்றோர் எடுத்த முடிவு.! கோவையை உலுக்கிய சோகம்..
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் நிவாரணம்.. முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!
- அப்பா, அம்மாவை பாத்துக்க முடியலைன்னா அவங்க கொடுத்த சொத்து எதுக்கு?.. முதியோர் இல்லத்தில் தவித்த பெற்றோர்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!
- 4 மகன்கள் இருந்தும்.. பஸ் ஸ்டாண்டுல தங்கும் நிலை.. கண்ணீருடன் போலீசில் மனு கொடுத்த வயசான தம்பதி.. இதயத்தை நொறுங்க செய்த சம்பவம்..!