"அவர் லெக் ஸ்பின் பவுலர்.. பவுலிங் போட்டா யாராலயும் ஆட முடியாது" - முதல்வர் குறித்து உதயநிதி சுவாரஸ்யம்.. வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலும் நடித்தும் திரைப்படங்கள் தயாரித்தும் வந்தார்.

Advertising
>
Advertising

தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக, உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை நிர்வகிக்கிறார். இந்நிலையில் தற்போது சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலினுடனும், முன்னாள் முதல்வர் கலைஞருடனும் கிரிக்கெட் விளையாடியதை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மிகச் சிறந்த லெக் ஸ்பின் பவுலர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோபாலபுரம். கலைஞருடைய இல்லம். அதன் பிறகு என்னுடைய தந்தை மேயர் ஆன பிறகு வேளச்சேரிக்கு சென்று விட்டேன். கோபாலபுரத்தில் இருக்கும் பொழுது கலைஞர் வீட்டு முன்பாக இருக்கும் இடத்தில் கிரிக்கெட் விளையாடுவோம். கலைஞருடனும் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் பந்து வீசுவார், பேட்டிங் ஆடுவார். கலைஞருடன் மட்டுமல்ல,  நம்முடைய தற்போதைய முதலமைச்சருடனும் நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அவர் மிகச் சிறந்த லெக் ஸ்பின் பவுலர். அவர் பவுலிங் போட்டால் யாராலயும் ஆட முடியாது. இங்கே எப்படி சிக்சர் அடிக்கிறாரோ, பவுலிங்கிலும் அப்படித்தான். அவருடன் விளையாண்டு இருக்கிறேன். எனக்கு இந்த விளையாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மகளிர் சுய உதவி குழு திட்டத் துறை ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு விளையாட்டுத் துறை அமைச்சராக இந்த நேரத்தில் நான் நன்றி சொல்கிறேன்.” என பேசினார்.

மேலும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ், சிறப்பு திட்ட செயலாக்க துறை அரசு முதன்மைச் செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர்  இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேக்னா ரெட்டி ஐஏஎஸ், மற்றும் துறை சார்ந்த அனைத்து அலுவலகங்கள், அதிகாரிகள், முதலமைச்சரின் உதவியாளர் தினேஷ், தன்னுடைய உதவியாளர்கள் செந்தில், மணிகண்டன் உள்ளிட்ட அனைவருக்கும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து தம் உரையை முடித்தார்.

MKSTALIN, MKARUNANIDHI, UDHAYANAITHI STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்