கணீர் குரலால் தமிழ் இல்லங்களில் எதிரொலித்த சண்முகம் மறைவு!.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, தமக்கே உரிய கணீர் குரலால் தமிழ் இல்லங்களில் எதிரொலித்தது பிரபல தொகுப்பாளர் சண்முகம், இவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
90களில் சன் டிவியில் சிறப்புப் பார்வை எனும் பிரிவில் ஒளிபரப்பாகும் செய்தித் தொகுப்பில், தனது கணீர் குரலில் பொறுமையாக செய்தியை விளக்கி வாய்ஸ் ஓவர் கொடுத்தவர் பத்திரிகையாளர் சண்முகம். தமக்கே உரிய அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவரது குரலுக்காகவே 90ஸ் கிட்ஸ் அரைமணி நேர செய்தியில் வரும் 5 நிமிட சிறப்புப்பார்வைக்காக காத்திருந்து பார்த்தது உண்டு.
பத்திரிக்கை நிருபராக தனது ஊடக பணியை தொடங்கிய இவர், மதுரையை பூர்விகமாக கொண்டவர். பின்னர் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியில் இருந்த இவர், பின்னர் அதில் இருந்து விலகி சில காலங்களாக பேச்சாளராக செயலாற்றி வந்தார். இந்நிலையில்தான், உடல்நலக்குறைவால் இவர் மரணமடைந்துள்ளார்.
இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் விடுத்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தமது செய்திக்குறிப்பில், “தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் . சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில், கணீர் குரல் - ஒழுங்கான வாசிப்பு - துல்லியமான உச்சரிப்பு என்று, செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 1 ரூபாய்க்கு 3 வேளை உணவு.. ஏழை எளியவர்களுக்கு 15 வருஷமா சேவை செய்யும் தம்பதி.. முதலமைச்சரின் உருக்கமான பதிவு..!
- உடனடியா அந்த பட்டியலை ரெடி பண்ணுங்க.. 15 நாள் டைம்.. MLA-களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்.. முழுவிபரம்.!
- "தெருவுல நிக்கிறேன்.. உதவி பண்ணுங்க".. முதல்வருக்கு கண்ணீருடன் பாட்டி வச்ச கோரிக்கை.. அடுத்த நாளே ஸ்பாட்டுக்கு போன அதிகாரிகள்.. நெகிழ வைக்கும் பின்னணி..!
- "இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம்".. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி ட்வீட். முழு விபரம்..!
- "6 வருஷமா என்ன பிரச்சனைனு கூட தெர்ல".. அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி முதல்வருக்கு வச்ச கோரிக்கை.. அடுத்தநாளே அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!
- முதல்வர் கைகளால் "தகைசால் தமிழர் விருது" பெற்ற தோழர் நல்லகண்ணு.! விருது பெற்ற கையோடு சுதந்திர தின மேடையிலேயே கொடுத்த சர்ப்ரைஸ்!
- "நான் Soft முதல்வர் என யாரும் நினைக்க வேண்டாம்".. ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி.. முழு விபரம்..!
- Chess Olympiad 2022 நிறைவு நாள்.. சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து பார்த்த முதல்வர்..
- "சென்னை நினைவுகள்.. மறக்க முடியாத பயணம்".. நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!
- ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் “செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகள்”