பொங்கலோ பொங்கல்!! தொகுதி மக்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.. அவரே பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.

Advertising
>
Advertising

Also Read | மரணமடைந்த செல்ல நாய்.. 50 அடிச்ச அப்புறம் ரோஹித் செஞ்ச உருக வைக்கும் செயல்.. கலங்கும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் என்பதால் மக்கள் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெளியூர் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிவருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை, கொளத்தூர் தொகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஸ்டாலின்,"தமிழ்நாடு முழுவதும் சுழன்று பணி செய்தாலும் எனது சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் எனக்கு முக்கியம் தான். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டசபை உறுப்பினராக பல பணிகளை செய்தோம். ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து பல பணிகளை செய்துள்ளோம். இன்னும் பணிகளை செய்ய உள்ளோம். கொளத்தூர் தொகுதிக்கு வரும்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைவதாக கூறினேன். இதற்கு நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் காரணம்" என்றார்.

மேலும், ஆட்சி அமைப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் மக்களிடம் கோரிக்கையை பெற்று அவற்றை பரிசீலித்து பல கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பதாகவும், கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டது என்றும் அறநிலையத்துறையில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, தனது மனைவியுடன் முதல்வர் முக. ஸ்டாலின் பொங்கல் வைத்தார். அதன் பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் முதல்வருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக முதல்வர் முக. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,"எனது கொளத்தூர் தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி உழவர் திருநாளை அவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தேன். தமிழர்களின் சமத்துவப் பெருவிழாவான பொங்கலையொட்டி இந்த மாதம் முழுவதும் அரசு நடத்தும் அறிவு-பண்பாட்டு நிகழ்வுகளோடு தமிழ்நாடு முழுவதும் தைத்திருநாள் சிறக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "யார் அந்த தேவதை".. மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி.. அந்த கேப்ஷன் தான்😍..!

MKSTALIN, CM MK STALIN, CM MK STALIN AND HIS WIFE, PONGAL CELEBRATION, KOLATHUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்