'படிக்கறது 9-ம் வகுப்பு தான்'... 'நாசாவுக்கு போகும்'... 'நாமக்கல் அபிநயா'... 'அப்டி என்ன செஞ்சாங்க'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவி அபிநயாவை பாராட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, இந்தியா முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவியருக்கு இணையம் வாயிலாக அறிவியல் தேர்வு நடத்தியது. இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 9-ம் வகுப்பு படித்து வரும் அபிநயா என்ற பள்ளி மாணவி பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாணவிக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாணவி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியாகும். விண்வெளித்துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி அபிநயா கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித்துறையில் இதுபோன்று பற்பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமெனவும் இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.
நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதையொட்டி, அபிநயாவின் சாதனையினை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும், அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆற்றை சுத்தம் செய்யப்போன 250 பள்ளி மாணவர்கள்’.. ‘திடீரென ஏற்பட்ட வெள்ளம்’.. 8 பேர் பலியான சோகம்..!
- ‘ஒரு நொடி’ கவனக்குறைவால்... பள்ளிச் ‘சிறுவனுக்கு’ நேர்ந்த பரிதாபம்... புது ‘வீட்டின்’ கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட ‘சோகம்’...
- 'பொதுத் தேர்வுகளில் மாணவிகளை’... ‘இந்த ஆசிரியர்கள் மட்டும் சோதனை செய்ய தடை’... ‘தேர்வுத்துறை அதிரடி அறிவுறுத்தல்’!
- 'தண்ணீர்' இல்லாத கழிவறைக்கு அலங்காரமா ஒரு 'தோரணம்' ... இதை கட்றதுக்கு 'வாஷிங்டன்னிலிருந்து' தொழில்நுட்பக் குழு வேற... புலம்பும் 'ட்ரம்ப்' கிராம மக்கள்...
- 'எக்ஸாம் 'டென்ஷன்'லாம் வேண்டாம்... அடிச்சு தூள் கிளப்புங்க!'... தேர்வு பயத்தை போக்க... புதிய அவதாரம் எடுத்த சிபிஎஸ்இ!
- ஒரு விஷயம் சொன்னா 'ஷாக்' ஆயிடுவிங்க... எவ்வளவுதான் 'வாக்கிங்' போனாலும்... 'ஆறு' மாத ஆய்வில் வெளியான அதிர்ச்சித் 'தகவல்'...
- ‘தாலி மாதிரியே செயினைக் கட்டிய மாணவன்’.. ‘வெட்கித் தலைகுனியும் மாணவி!’.. ‘வீடியோவால் பரபரப்பு!’.. ‘களத்தில் இறங்கிய குழந்தைகள் பாதுகாப்பு குழு!’
- 'இனி 108 ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் வருதுனு தெரிஞ்சுக்கலாம்... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!
- ‘பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு’... ‘21 வயது நிறைந்தால்’... 'முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு'!
- எப்டி என் 'பையன' அடிக்கலாம்?... பள்ளிக்கே சென்று...ஆசிரியரை பெல்ட்டால் 'சரமாரியாக' தாக்கிய தந்தை!