‘அவங்களும் மனுஷங்க தானே’!.. ‘மக்கள் மனசாட்சியோட நெனச்சு பாருங்க’.. முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்த கடுமையான வெயிலில் ஒவ்வொரு காவலர்களும் 8 மணி நேரம் நிற்கிறார்கள், அவர்களும் மனிதர்கள் தானே என முதல்வர் தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகின்றன. அதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளரக்ள் மற்றும் காவலர்கள் இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு காவலர் ஒருவர் தனது இரவு உணவை நள்ளிரவு 1.45 மணிக்கு சாப்பிடும் புகைப்படத்தை தமிழக காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதேபோல் இரவு கொசுக்கடிக்கு மத்தியில் தூங்கும் காவலர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த நிலையில் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் காவலர்களில் நிலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணிநேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21 நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காசு போனா திரும்ப வரும், உயிர் போனா'?...'மோடிஜி இத பண்ணுங்க'... சந்திரசேகர ராவ் அதிரடி!
- “நீங்க ஏன் இவங்களுக்கு லெட்டர் எழுதி அவங்க தோத்துட்டாங்கனு சுட்டிக்காட்டக் கூடாது? இது ஒரு ட்ரெண்ட் ஆயிடுச்சு!”.. கமலை காட்டமாக விமர்சித்த காயத்ரி ரகுராம்!
- 'எங்களுக்கு வருமானம் இல்லனாலும் பரவாயில்ல... வாத்தியார்களுக்கு சம்பளம் கொடுங்க!'... பதநீர் விற்று... பள்ளிக்கூடம் நடத்தும் கிராமம்!... மெய்சிலிர்க்கவைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'யாராவது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க'...'ரோட்டில் தவித்த முதியவர்கள்'...பயந்து ஒதுங்கிய பொதுமக்கள்!
- “கொரோனா அப்டிக்கா போகட்டும்.. நாம இப்படிக்கா போவோம்!”.. “ட்ரெண்டிங்கில் சாரி சேலஞ்ஜ்!”.. வைரல் வீடியோ!
- ‘வைரஸை விட நாம பலசாலினு யாரும் நினைச்சிடாதீங்க’.. ‘எல்லோரும் இத ஃபாலோ பண்ணுங்க’.. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளைஞர்..!
- 'ஒரு முடி வழியா கூட வர பெர்மிஷன் தர மாட்டோம்...' கொரோனா வைரஸ் வந்துவிடக்கூடாது என போட்டுக்கொண்ட 'மாஸ்' மொட்டை...! 'பாலிஷ்' தலையோடு ரோந்து சென்ற போலீசார்...!
- 'சினிமா' கலைஞர்களுக்கு 'அமிதாப்பச்சன்' செய்யும் உதவி... '1 லட்சம்' குடும்பங்களுக்கு 'மளிகைப் பொருட்கள்...' 'பசி என்னும் நோய்க்கு மருந்து...'
- 'முதல் முறையா நிம்மதி பெருமூச்சு'...'புதிய அறிக்கையை வெளியிட்ட சீனா'...ஆனா புதுசா கிளம்பும் பூதம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!