‘பொங்கல் பரிசு ரூ.1000’.. ‘இலவச வேட்டி, சேலை’.. தொடங்கி வைத்தார் முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்குகிறது. இதனை சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் அறிவித்தார். இதனை அடுத்து இதற்காக ரூ.2,363 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் முதல்கட்டமாக 5 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று (29.11.2019) தொடங்கி வைத்தார். இதனுடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புதுண்டு வழங்கப்பட்டது. மேலும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் இன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் என்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கு இன்றுதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் பிரச்சனைய தீர்த்துட்டு போங்க!'.. முதல்வர் காரை வழிமறித்து.. 'கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு'.. இளைஞரால் பரபரப்பு!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘பொங்கல் பரிசு ரூ.1000’.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்போ..? வெளியான அறிவிப்பு..! விவரம் உள்ளே..!
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘பொங்கல் பரிசு’!.. ‘ஆனா இவங்களுக்கு மட்டும்தான்’.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
- ‘உலகப் படங்களுக்கு நிகரான தமிழ் படங்கள்’... ‘நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்’... விவரம் உள்ளே!
- முதல்வர், துணைமுதல்வர் முன்னிலையில், தமிழகத்தில் 8 தாலுகாக்களுடன் உதயமாகியுள்ள புதிய மாவட்டம்!
- 'நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு'... 'முதல்வர் அதிரடி பதில்'... ‘சீமான் கடும் விமர்சனம்’!
- 'இவங்களோட கம்பேர் பண்ணிகிட்டா'.. 'அவருக்கு அவரே சூடு போட்டுக்கிறார்னு அர்த்தம்'.. கொங்கு ஈஸ்வரன் காட்டம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘அவர் சொல்றது உண்மைதான்’... ‘ரஜினி கருத்துக்கு’... 'ஆதரவு தெரிவித்த கமல்'!