‘பசி’ கொரோனாவை விட கொடியது.. ‘இத என் கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி’.. முதல்வர் எடுத்த அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவித்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ட்விட்டர் வழியாக முதல்வர் உதவி செய்தார்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கால் ஆதரவற்றவற்றவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு உணவு சரிவர கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் விருதுநகரில் பட்டாசு தொழிலாளர்கள் போதிய உணவின்றி தவித்து வருவதாகவும், அவர்களில் சிலர் ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வருவதகாவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவை புதிய தலைமுறை செய்தியாளர் ரமேஷ் என்பவர் முதல்வர் பழனிசாமிக்கு டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர், அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும். இதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி என தெரிவித்திருந்தார். ட்விட்டரில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக ட்விட்டரிலேயே பதிலளித்து, அதுகுறித்து நடவடிக்கை எடுத்து வரும் முதல்வரின் செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கண்' தெரியாமல் தஞ்சமடைந்த 'காட்டுமாடு'... கொரோனாவிற்கு மத்தியிலும் 'இளைஞர்கள்' செய்த காரியம்!
- 'ஆர்டர்' பண்ணுங்க... 'ஆவின் பால்', ஐஸ்கிரீம், தயிர்... அத்தனையும் உங்க 'வீடு' தேடிவரும்!
- 'இருக்குற' நோயையே 'சமாளிக்க' முடில... அதுக்குள்ள 'இந்த' நோயும் வந்திருச்சு... 'இரட்டை' தாக்குதலில் சிக்கிய நாடு!
- நாட்டிலேயே 'இந்த' 5 நகரங்களில் தான்... 'கொரோனா' பரவல் அதிகம்: உள்துறை அமைச்சகம்
- “கொரோனா பர்கர்!”.. “பீட்சா.. டோப்பிங்ஸ்க்கு பிளாக் ஷூ பாலிஷ்”.. ஜொமாட்டோவின் கேள்விக்கு குவிந்த “வைரல்” பதில்கள்!
- ‘கடைகள் மூடியிருந்தால் என்ன?’... ‘ஊரடங்கில் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு’... ‘இலவசமாக உதவ முன்வந்த பிரபல நிறுவனங்கள்’!
- கொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...
- ‘எப்படி வந்ததுனே தெரியலை’... 'நான்கு மாத பச்சிளம்’... ‘பெண் குழந்தைக்கு நிகழ்ந்த துக்கம்’!
- "இப்ப திருப்திதானே?".. 'போலீஸைப்' பார்த்ததும் 'பால் பாக்கெட்' பையை 'மாஸ்க்காக' மாற்றி 'சமாளித்த' நபர்!
- 'இத மட்டும் எங்களால தாங்கவே முடியல... உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு!.. என்ன நடந்தது?