பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும்... தென் மாவட்டங்களுக்கு நேரடி 'விசிட்' அடிக்கும் முதலமைச்சர்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் 6, 7 தேதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களுக்கு செல்லவிருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் கொரோனா தற்போது வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் சென்னை பாணியை கையிலெடுத்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 6, 7-ம் தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கண்ட மாவட்டங்களுக்கு சென்று கொரோனா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்து இருக்கிறாராம். அதன்படி 6-ம் தேதி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் கொரோனா ஆய்வு கூட்டத்தை முடித்து விட்டு மறுநாள் காலை 7-ம் தேதி காரில் திருநெல்வேலி செல்கிறார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுக்கிறார். முன்னதாக, நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து விட்டு அங்கிருந்து சேலம் கிளம்பி செல்கிறார். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உங்க வீட்ல புதையல் இருக்கு"... 'பூஜை' ஒண்ண போட்டு... "உங்க குழந்தைய நரபலி குடுக்கணும்"... போலி சாமியார் பேச்சை நம்பி துணிந்த தந்தை... நள்ளிரவில் பகீர் கிளப்பிய 'சம்பவம்'!!
- “மும்மொழிக் கொள்கைக்கு என்றுமே இடம் இல்லை!”.. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நகர்வு!
- “தமிழக முதல்வருக்கு நன்றி!”.. புதிய கல்விக் கொள்கையில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவு!.. ஸ்டாலின் போட்ட பரபரப்பு ட்வீட்!
- எப்போ பார்த்தாலும் 'டார்ச்சர்' தான்... கடைசியா எவ்ளோ 'சொல்லி'யும் கேட்கல.. கணவரை கொலை செய்தது ஏன்?... ஆசிரியை அதிர்ச்சி வாக்குமூலம்!
- '18 மாவட்டங்களில்'... 'ரூ 280.90 கோடி மதிப்பில் புதிய நீர்வள திட்டப்பணிகள்'... 'அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்'...
- ‘பிரேத பரிசோதனையின்போது’ அதிர்ந்த மருத்துவர்கள்.. ‘மாட்டிக்கொண்ட பிறகு’ மனைவி கொடுத்த ‘பரபரப்பு’ வாக்குமூலம்!
- 'ஆகஸ்ட் மாதம் முதல் திருமண நடைமுறைகளுக்கு விலக்கா'?... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'?... தமிழக அரசு விளக்கம்!
- “அண்ணா.. எம்ஜிஆர்.. ஜெயலலிதா!”.. பட்டையை கிளப்பும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய புது பெயர்கள்... தமிழக முதல்வர் அதிரடி!
- 'சென்னையின் நிலவரம் என்ன'... 'மருத்துவ நிபுணர் கூட்டத்தில் முதல்வர் என்ன சொன்னார்'... வெளியான விரிவான தகவல்!
- BREAKING : 'தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு'... 'சென்னையில் என்னென்ன தளர்வு'?... அரசின் விரிவான அறிவிப்பு!