‘உலகப் படங்களுக்கு நிகரான தமிழ் படங்கள்’... ‘நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்’... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கப்பட்டு, இந்த ஆண்டு வெளியான எல்.கே.ஜி., கோமாளி, பப்பி ஆகிய படங்களின் வெற்றி விழா, சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைப்பெற்ற இந்த விழாவில் முதலில் திரைப்பட நடிகர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விருதுகளை வழங்கினார். பின்னர்  பேசிய அவர், ‘இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை. உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களைத் தருபவர்கள் தமிழ் திரையுலகினர். உலகப்படங்களுக்கு நிகராக தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது, பெருமையாக உள்ளது.

முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர்., திரைப்படங்களில் வெற்றிப்பெறுவதற்கு நாடகத்தில் எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சியும், பயிற்சியும் தான் காரணம். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்த காலம் தான், தமிழ் சினிமாவின் பொற்காலம். எம்.ஜி.ஆரை போன்று நல்ல கருத்துகளை சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும். நகைச்சுவை படங்களை பார்க்கும்போது, மக்களின் மனதிலுள்ள கவலைகள் நீங்கும். மக்களும் தங்களை மறந்து சிரிப்பதால், அத்தகைய படங்களை எடுக்க வேண்டும்.

தீய பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் இருக்கும் படங்களில், நடிகர்கள் மற்றும் நடிககைகள் நடிக்க வேண்டாம் என்றும், அத்தகைய படங்களையும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எடுக்க வேண்டாம்’ என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த விழாவில், விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

EDAPPADIKPALANISWAMI, MGR, JJAYALALITHAA, FUNCTION, ROYAPETTAH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்