"எந்த முதல்வரும் அனுபவிக்காத வேதனையை அடைந்துள்ளேன்"! - தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைத்துத் தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தயார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், எந்த முதலமைச்சரும் அனுபவிக்காத வேதனையை அடைந்துள்ளேன் என்றும் கூறினார்.

தமிழகத்தில் சாதி, மத மோதல்கள் இல்லாத சட்டத்தின் ஆட்சி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஊதிய உயர்வு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குவது அதிமுக அரசுதான் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, காயிதேமில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறிய முதலமைச்சர், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், அனைவருக்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்