‘இந்திய அளவில் அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பெருமிதம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய அளவில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக முதல்வர் பெருமையோடு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று (24-03.2021) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘பொங்கல் பண்டிகையை, எளிய மக்களும் உற்சாகத்துடன் கொண்டாட பல்வேறு பொருட்களை அரசு இலவசமாக அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையின்போதும், கொரோனா காலத்திலும் அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, திமுக ஆட்சிக் காலத்தில் நிதி உதவி அளிக்கப்பட்டதா? திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை, எடுத்துதான் பழக்கம்’ என முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘இந்திய அளவில் அமைதி பூங்காவாக திகழ்வது தமிழ்நாடு. நான் விவசாயியாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் பயிர்கள் செழித்து வளர்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கரண்ட் எப்போ வரும், எப்போ போகும்னே தெரியாது...' 'திமுக ஆட்சியில கம்பெனிங்கலாம் எடத்த காலி பண்ணிட்டே போய்ட்டாங்க...' 'ஆனா இப்போ நிலைமையே வேற...' - முதல்வர் அதிரடி பேச்சு...!
- 'ராஜா சார், எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம்'... 'இத மட்டும் நீங்க செஞ்சா போதும்'... ஹெச்.ராஜாவிடம் பெண்கள் கண்ணீர் விட்டதால் பரபரப்பு!
- 'நான் தேர்தல்ல நிக்க போறேன்!.. ஓட்டுக்கு பணம் கொடுக்கணும்ல... அதுக்கு Loan கொடுங்க'!.. வேர்த்து விறுவிறுத்துப் போன வங்கி அதிகாரி!
- 'தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த துயரம்'... 'திடீரென மயங்கி விழுந்து இறந்த எம்பி'... சோகத்தில் உறைந்த தொண்டர்கள்!
- 'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'... முதல்வரின் அடுத்தகட்ட சூறாவளி சுற்றுப்பயணத் திட்டம்!
- 'மண்வெட்டி பிடிச்ச கை இது...' 'எதுக்கும் பயப்பட மாட்டேன்...' 'விவசாயிகளுக்காக வந்த ஒரே முதல்வர் நான் தான், அதுக்கு காரணம்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!
- 'சொல்லி 24 மணி நேரம் கூட ஆகல...' 'அதுக்குள்ள எடுத்த முடிவுல மிகப்பெரிய சேஞ்ச்...' - மாஸாக வந்து மன்சூர் அலிகான் சொன்ன கபாலி பஞ்ச் டயாலக்...!
- "தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு!".. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
- ‘ஸ்டாலினை அவரது தந்தையே நம்பவில்லை’!.. ‘அப்புறம் நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்’.. முதல்வர் பழனிசாமி விமர்சனம்..!
- 'யார் இளைஞர்களுக்கு அதிகம் வேலை கொடுத்தது'?... 'விவரங்களுடன் பட்டியல் போட்ட முதல்வர்'... தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடி!