'3-ம் நிலைக்கு போகலாம்'...'அதுக்கு வாய்ப்பிருக்கு'... 'எச்சரித்த முதல்வர்'...ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 2-ம் நிலையில் உள்ள கொரோனா 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான 12 பணி குழுக்களுடன், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய முதல்வர், ''கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. முக கவசம், மாத்திரைகள் போதிய அளவுக்கு உள்ளன. 32,371 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயாராக உள்ளன. 3371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2500 வெண்டிலேட்டர்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்காக 14,525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் மிகவும் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலவர், கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார். மேலும் தமிழகத்தில் 2-ம் நிலையில் உள்ள கொரோனா 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த பிஞ்சுகளுக்கு எதுவும் ஆக கூடாது'...'நெக்ஸ்ட் லெவலுக்கு போன மருத்துவமனை'...குவியும் பாராட்டு!
- ‘மூச்சு திணறல்’.. ‘24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு’.. கொரோனா பாதிப்பில் இருந்து சென்னை மூதாட்டி குணமடைந்தது எப்படி..?
- 'கொரோனா தொற்று இல்லாதப் பேருந்து'... 'முதன்முறையாக தொடங்கிய மாநிலம்!
- 'கட்டுக்குள்' வந்துவிட்ட போதும்... இன்னும் 'இந்த' ஆபத்து இருக்கு... கவலையுடன் 'எச்சரித்துள்ள' சீன அதிபர்...
- 'நிலைமை இப்போ கொஞ்சம் 'ஓகே' தான்' ... ஆனாலும் பாம்பு பண்ணைக்கு நோ ... சீனாவில் தவிக்கும் 'பாம்பு கிராமம்'!
- அடுத்தடுத்த சிக்கல்களால் கதிகலங்கும் அமெரிக்கா!... போர்க்கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா!... நெருக்கடியில் கடற்படை தலைவர் அதிர்ச்சி முடிவு!
- ‘கட்டிப்பிடிச்சு கூட அழ முடியாது’!.. கொரோனா வைரஸ் தாக்கி இறந்தவர்களின் இறுதிசடங்கு இப்படி தான் நடக்கும்..!
- 'கொரோனாவால்' வருமானத்தை இழந்து நின்ற 'நண்பர்களை'... மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கு' கொண்டு சென்ற 'ஜாக்பாட்!'...
- ‘10-ம் வகுப்பு தேர்வு எதற்காக ரத்து செய்யப்படவில்லை’... ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்’!
- 'பொழப்புக்காக இங்க வந்து டாக்சி ஓட்டுறாங்க'...'நொறுங்கிய 'அமெரிக்கா'... இந்தியர்களுக்கு நேர்ந்த கோரம்!