'3 லட்சத்தை கடந்த பாதிப்பு'... 'முதல்வர் இந்த முடிவை எடுப்பாரா'?... மருத்துவ குழுவுடன் முக்கிய ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மருத்துவக் குழுவுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை என்பது 3 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில் அது முடிய இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் முதல்வர் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் தமிழகத்தில் இ-பாஸ் முறை தொடர்வது குறித்தும் முக்கிய முடிவை முதல்வர் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் அடுத்த ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள்!.. சர்ப்ரைஸ் விசிட்-ஆக வந்து... முதல்வர் பழனிசாமி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
- ஐபிஎல் அணிகளில் முதல் ஆளாக சிஎஸ்கே வீரருக்கு கொரோனா உறுதி!.. இன்னும் 22 நாட்களே இருக்கும் நிலையில்.. பரபரப்பு தகவல்!
- "வேற வழியே இல்ல... சென்னை மக்கள் இன்னும் 4 மாசத்துக்கு... இத கட்டாயம் செஞ்சே ஆகணும்”... - 'கொரோனா குறையாததால், மாநகராட்சி கமிஷனர் ஆணை!!!'
- 'எல்லோருக்கும் ஃபிரீ டெஸ்ட்'... 'அதெல்லாம் இல்ல'... 'சீனாவோட பயங்கரமான பிளான் இதுதான்'... 'அச்சத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ள மக்கள்!'...
- 'நிறையா பேருக்கு வேல போயிடுச்சுனு பயப்படாதீங்க!.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்'!.. பிரபல ஐடி நிறுவனம் சொன்ன 'சூப்பர் குட் நியூஸ்'!!
- 'இதுவரைக்கும் 'அவங்க' ஒருத்தருக்கு கூட கொரோனா இல்ல!'.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை 'பரபரப்பு' கருத்து!.. முதற்கட்ட ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'கொரோனா தொற்று'... வசந்தகுமார் எம்.பி. மிகவும் கவலைக்கிடம்!
- தேங்க் யு கொரோனா...! 'சிஎம் சாரோட ஒரே அறிவிப்பு...' '23 அரியரும் கிளியர்...' - நெகிழ்ச்சி அடையும் மாணவர்...!
- 'மச்சான் அப்போ பாண்டிச்சேரி பிளான்'?... 'அதிகரிக்கும் கொரோனா'... வெளியான புதிய உத்தரவு!
- 'Final year மாணவர்கள் எல்லாரும் ரெடியா இருங்க'!.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!.. அடுத்தடுத்து வெளியான தகவல்களால்... அதிர்ச்சியில் மாணவர்கள்!