‘புயல் முடிந்ததும்’... ‘நெட்டிசன் வைத்த கோரிக்கை’... ‘உடனடியாக ட்விட்டரில் பதில் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெட்டிசன் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் புதுச்சேரியிலிருந்து 120 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 215 கிமீ தொலைவிலும், கடலூரிலிருந்து 110 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலானது இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வீசும் காற்றால் சாலைகளில் சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

இதனை அப்புறப்படுத்தும் பணியும் உடனுக்குடன் நடந்து வருகிறது. இந்நிலையில் புயலால் சென்னையில் சாய்ந்து விழும் மரங்களுக்கு பதிலாக. புயல் ஓய்ந்ததும், புதிய மரங்களை உடனடியாக நட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர்  கோரிக்கையை வைத்திருந்தார். இதற்கு முதல்வர் எடப்படாடி பழனிச்சாமி, கண்டிப்பாக தம்பி என்று  உடனடியாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்