‘பரபரக்கும் தேர்தல் களம்’!.. முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதி என்ன..? விருப்ப மனு தாக்கல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிக்கான விரும்ப மனுவை அளித்துள்ளனர்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, இன்று (24.02.2021) சென்னை ராயப்பேட்டை அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விரும்ப மனு விநியோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விருப்ப மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலும், செங்கோட்டையன் மீண்டும் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியிலும், எஸ்.பி. வேலுமணி மீண்டும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்