'தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டம்'... 'முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை'... வெளியான முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டசபை கூட்டம் தொடங்க இருக்கும் நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது இம்மாதம் 14-ந் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையைக் கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் காலை 10 மணிக்குச் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
மற்ற செய்திகள்
"சவாலை ஏற்கிறேன்!".. 'டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்' கேட்டதற்காக களத்தில் இறங்கும் 'இவாங்கா டிரம்ப்'!
தொடர்புடைய செய்திகள்
- '1 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி'... 'அதுல இந்தியாவுல மட்டும்'... 'தொடர் சர்ச்சைகளைத் தாண்டி'... 'ஜெட் ஸ்பீடில் செல்லும் நாடு!'...
- 'அடுத்த மாசமே இத எதிர்பார்க்கலாம், அப்பறம்'... 'பரிசோதனையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவுக்குப் பின்'... 'அடுத்தடுத்து வரும் நம்பிக்கை தரும் தகவல்கள்!'...
- 'ரூ.377 கோடி செலவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வீடு!'.. 'கொரோனா தாக்கம் முடிஞ்சதும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!'.. அசத்தும் தமிழக அரசு!
- 'கொரோனா நோயை விட அதிகமா'... 'இந்தியர்கள் பயந்தது இதுக்கு தானாம்'... 'வெளியாகியுள்ள ஷாக் தரும் சர்வே முடிவு!'...
- ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டது ஏன்?.. ஒரு சிறிய தவறால்... உலகம் முழுமைக்கும் பின்னடைவு!.. அதிர்ச்சி தகவல்!
- 'எவ்ளோ வெயிட் பண்ணி பாத்தும்'... 'வேற வழி தெரியல'... 'பிரபல நிறுவனத்தின் திடீர் முடிவால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- 'ரொம்ப எதிர்பார்த்த தடுப்பூசி'... 'அங்க என்னதான் நடக்குது?'... 'அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு நடுவே'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்!'...
- 'யூஜிசி நடைமுறைப்படியே தேர்ச்சி'... 'அரியர் தேர்வு விவகாரம் குறித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!'...
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'இந்தியாவில் பாதிப்பில்லை எனக் கூறப்பட்டநிலையில்... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவு'... 'கோவிஷீல்ட் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்!'...