‘மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க’.. நிவர் புயல் எதிரொலி.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நிவர் புயல் காரணமாக நாளை (25.11.2020) தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதல்வர் தெரிவித்தார். புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டுமே நாளை பணிபுரிவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், வெளியே வரவேண்டாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தொடர் கனமழை’!.. செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன..? அதிகாரிகள் ‘முக்கிய’ தகவல்..!
- ஒருவேளை ‘நிவர் புயல்’ அங்க கரையை கடந்தா.. சென்னையில் ‘மிக’ கனமழை பெய்யும்.. வெதர்மேன் ‘முக்கிய’ தகவல்..!
- ‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதால்.... ‘வானிலை மையம்’ முக்கிய ‘அப்டேட்!’
- '4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை!
- "மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்!" - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!.. 'திமுக'வுக்கு பதிலடி!
- உருவான ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னைக்கு மழை இருக்கா?.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமித்ஷாவின் வருகை'... 'அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை'... இவங்க இரண்டு பேரையும் சந்திப்பாரா?
- 'அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி'... வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!
- ‘நீங்க நிருபர்.. என்ன இப்படி தவறா கேக்குறீங்க..?’.. ‘நான் கிராமத்துல இருந்து வந்தவன்’.. ஆவேசமான முதல்வர்..!
- "இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்"... 'மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில்'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி!!!'...