தமிழகத்தில் ‘ஊரடங்கு’ நீட்டிப்பு.. புதிய தளர்வுகள் என்னென்ன?.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வரும் 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை பொது ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 07.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை 07.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 01.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஆந்திரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்