'தங்கத்தை பேப்பர்ல பாருங்க'... 'நியூஸ்ல பாருங்க'... ஆனா 'வாங்கனும்னு' ஆசைப் படாதிங்க...'31ம் தேதி' வரை... 'தமிழகம்' முழுவதும் 'நகைக்கடைகள்' மூடல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மார்ச் 31 வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

மக்கள் கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள், கோவில்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும் 425 பேர்  நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதித்த மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளை தவிர, அனைத்து கடைகளையும் மூட மத்திய அரசு வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடை அடைக்கப்படுவதாகவும், முன்பு ஆர்டர் செய்தவர்களுக்கு மட்டும், நகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CORONA, TAMILNADU, JEWELERY SHOPS, CLOSURE, 31ST MARCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்