Video: ‘கொலையா? தற்கொலையா?’.. வெளியான ‘பரபரப்பு’ பிரேத பரிசோதனை முடிவு! வீடு வந்து சேர்ந்த சித்ராவின் பூத உடல்! கதறி அழும் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை நசரத்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Video: ‘கொலையா? தற்கொலையா?’.. வெளியான ‘பரபரப்பு’ பிரேத பரிசோதனை முடிவு! வீடு வந்து சேர்ந்த சித்ராவின் பூத உடல்! கதறி அழும் மக்கள்!

இறந்துபோன நடிகை சித்ராவின் கன்னத்திலும், கழுத்திலும் காயங்கள் இருந்ததால்,  அவரது இறப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்ததின் அடிப்படையிலும், சித்ராவின் தந்தை அளித்த அடிப்படை புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Chithra's body on the way to her home after postmortem

மேலும் விசாரணைக்காக சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவி மற்றும் சித்ராவுடன் சீரியலில் நடித்து வந்த நடிகர், நடிகையரிடமும்  விசாரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சித்ராவின் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தற்போதைக்கு உறுதியாகி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்