'எங்க தடுப்பூசி ரொம்ப பாதுகாப்பானது'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சீனா'... உலக சுகாதார நிறுவனம் முக்கிய முடிவு !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீனா கொரோனாவுக்கு எதிராகத் தயாரித்துள்ள சைனோபார்ம் என்ற தடுப்பூசி பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தலைமை இயக்குநர் மரிய ஏஞ்சலா சிமாவோ செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “கடுமையான கொரோனாவுக்கு எதிரான செயல் திறன் மிக்கது சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி என்பதற்கு எங்களிடம் ஆதரவு உள்ளது. இந்த தடுப்பூசி உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 கோடியே 20 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பாதுகாப்பானது. செயல்திறன் மிக்கது” எனக் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்