மொத்தம் 6500 பேர்.. 'மாணவ,மாணவிகள்'... அரசியல்வாதிகள்.. 'லிஸ்டைப்' பார்த்து.. 'அதிர்ந்து' போன போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், வீடியோ பார்ப்பவர்களின் லிஸ்டை காவல்துறை தயாரித்து வருவதாகவும் கடந்த மாதம் தகவல் வெளியானது. போலீஸ் தரப்பில் இருந்தும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த வீடியோக்களை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

இந்தநிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி மொத்தம் 6500 பேர் இந்த பட்டியலில் இருப்பதாகவும், அதில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், அரசியல் பிரபலங்கள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சி பிரபலங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை பார்த்து போலீஸ் தரப்பில் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம்.

இதுகுறித்து போலீசார் தரப்பில்,'' கட்சி பிரபலங்கள் பலர் இருப்பதால் அவர்களை எப்படி அழைத்து விசாரிப்பது என தெரியவில்லை. அதேபோல் எல்லோரையும் திடுதிப்பொன்று உடனே அழைத்து விசாரித்துவிட மாட்டோம். முதலில் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்பு அவர்களுக்குத் தகவல் அளித்த பிறகு முறையாக விசாரிப்போம். நாங்கள் யாரையும் போனில் அழைத்து விசாரிப்பது இல்லை. யாரும் அப்படிப் பேசினால் எங்களிடம் தகவல் சொல்லுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.

கடந்த வாரம் நெல்லை இளைஞர் ஒருவரிடம் போலீசார் போனில் பேசியதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் நாங்கள் போனில் அழைத்து யாரையும் விசாரிப்பது  இல்லை என்று தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்