#BREAKING: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் போது, குறுகிய காலகட்டத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடித்தது இந்தியா. இது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு பிறகு, கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்