'பிக்பாஸ் விவகாரம்'... கமல்ஹாசனுக்கு அமைச்சர் 'செல்லூர் ராஜூ' சொன்ன பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், டிசம்பர் 13-ம் தேதி அன்று மதுரையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மதுரை, உசிலம்பட்டி, திருநெல்வேலி எனப் பல்வேறு ஊர்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின்போது அதிமுகவைக் கடுமையாகச் சாடினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று (டிசம்பர் 17) பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "70 வயதில் பிக் பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதைப் பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது. அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுவிடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டுவிடும்" என்று தெரிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாகத் தமிழக முதல்வரின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கமல் தனது ட்விட்டர் பதிவில், "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ''பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலமைச்சரும், அமைச்சர்களும் பார்ப்பதில்லை. எங்கள் யாருக்கும் பிக்பாஸ் பார்க்க நேரமில்லை. அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது. அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லை'' என கமல்ஹாசனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்’... ‘அரசியலில் கூட்டணி வைத்தாலும்’... ‘நாம் தமிழர் சீமான் அதிரடி பதில்’...!!!
- 'எதிர் காலம் வரும் என் கடமை வரும்...' 'இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்...' - மீண்டும் கமல்ஹாசன் ட்வீட்...!
- "நல்லா இருக்கும் குடும்பங்களை கெடுப்பது தான் கமல்ஹாசன் வேலை!".. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!.. கமல் ரிப்ளை என்ன?
- 7.5% உள் ஒதுக்கீடு ‘அவசரமாக’ கொண்டு வர என்ன காரணம்..? முதல்வர் பழனிசாமி விளக்கம்..!
- 'திமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக...' உதயநிதியோடு சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுவது உண்மையா...? - கமல்ஹாசன் விளக்கம்...!
- ‘ரஜினியோடு கூட்டணி வைத்தால்’... ‘முதல்வர் வேட்பாளர் யார்?’... எம்.என்.எம். தலைவர் கமல்ஹாசன் பதில்...!!!
- ‘பரபரக்கும் தேர்தல் களம்’.. கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி இதுதானா..? எகிறும் எதிர்பார்ப்பு..!
- "ஈகோவை விட்டுக் கொடுக்க தயார்!".. கமல் அதிரடி!.. ஓகே சொல்வாரா ரஜினி?.. உருவாகிறதா 'ஸ்டார்' கூட்டணி?
- முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி திட்டம்!.. மினி கிளினிக் என்றால் என்ன? செயல்படும் நேரம் என்ன? அமைப்பு எப்படி இருக்கும்?
- சாதாரண ரூபத்தை 'விஸ்வரூபம்' எடுக்க வைக்குறாங்க...! 'தேர்தல் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக...' - கமல்ஹாசன் கண்டனம்...!