'கேள்வி கேட்ட பெண்ணை அடிப்பீங்களா? தீட்சிதருக்கு அபராதம்'.. '2 மாதம் சஸ்பெண்ட்'.. அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய போன செவிலியர் பெண்மணியை அக்கோவிலில் இருந்து தீட்சிதர் அறைந்ததாக வெளியான வீடியோவை எடுத்து விஷயம் பரபரப்பானது.

பலதரப்பட்ட கருத்துக்களும், விவாதங்களும் இந்த விவகாரத்தில் எழுந்ததை அடுத்து தாக்கப்பட்ட பெண்மணியான லதா தீட்சிதர் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர். அதே சமயம் பெண்ணை தாக்கியதால்,  திருக்கோவில் பணியிலிருந்து தீட்சிதர் தர்ஷன் இரண்டு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.  தவிர அங்கிருந்த பொது தீட்சிதர்கள் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், செவிலியர் சங்கம் சார்பில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் அளிக்கப்பட்ட மனுவின்படி, தீட்சிதர் தர்ஷனை கண்டித்து வரும் வியாழனன்று தெற்கு சன்னதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி கோரியுள்ளனர். பின்னர் தலைமறைவாகியுள்ள தீட்சிதர் தர்ஷன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சிதம்பரம் டிஎஸ்பி வாக்கு கொடுத்துள்ளார்.

CHIDAMBARAM, TEMPLE, ASSAULT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்