'2 தீட்சிதர்களுக்கு கொரோனா!'... 'புதிய கட்டுப்பாட்டால்!'.."150 தீட்சிதர்கள் பங்கேற்க வேண்டிய சிதம்பரம் நடராஜர் கோவில் திருமஞ்சன விழாவில் சிக்கலா?!"
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானது.
முன்னதாக இந்த கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த ஜூன் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் 50 தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தேர்த்திருவிழா, தரிசனம் உள்ளிட்டவற்றை சமூக இடைவெளியுடன் நடத்தவும், அதில் 150 தீட்சிதர்கள் பங்கேற்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு அளித்திருந்தது.
இதனிடையே அப்பகுதியில் கீழ வீதியில் இருக்கும் ஒரு தீட்சிதர், வடக்கு சன்னதியில் இருக்கும் ஒரு தீட்சிதர் என இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்பின்னர் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா உத்தரவின் பேரில் கோவில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீட்சிதர்களுக்கு தொற்று உறுதியானதால், கோவிலுக்கு செல்ல 5 தீட்சிதர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கலெக்டர் அன்புச்செல்வன் உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா எளிமையாக நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும், கோயிலுக்குள் செல்லக்கூடிய தீட்சிதர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், திருவிழாவை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "டெய்லி எதுக்குங்க இவ்ளோ கொரோனா கேஸ் வருது?".. டெபியுட்டி கமிஷனரை சேரைத் தூக்கி அடிக்கச் சென்ற கட்சி பிரமுகர்! பரபரப்பு வீடியோ!
- "ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு!".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'!
- 'அமெரிக்கா' அதிகாரப்பூர்வமாக 'அறிவித்ததை விட...' '7 மடங்கு அதிகம்...' 'உண்மையான' கொரோனா 'பாதிப்பை...' 'அம்பலப்படுத்தியது சுகாதாரத்துறை...'
- மதுரையில் மேலும் 190 பேருக்கு பாதிப்பு!.. சேலத்திலும் தொடர்கிறது கொரோனாவின் கொடூரம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- கருவாட்டுக்கு வந்த 'திடீர்' கிராக்கி ... சர்ரென 'எகிறிய' விலை... என்ன காரணம் தெரியுமா?
- மின்னலைவிட வேகமாகப் பரவும் கொரோனா!.. தமிழகத்தில் 3,645 பேருக்கு ஒரே நாளில் தொற்று!.. முழு விவரம் உள்ளே
- "இப்ப இருக்குற நிலைமையில கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இதான்!"- பிரதமர் மோடி!
- 'சென்னை காவல்துறையில்...' கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது...!
- கொரோனா 'ஆர்என்ஏ-வை' அழிக்கும்... 'செயற்கை' ஆர்என்ஏ... லண்டன் 'இம்பீரியல்' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'கொரோனா' ஒழிப்பில் 'புரட்சியை' ஏற்படுத்தும் என 'நம்பிக்கை...'
- ‘15,000 பேருக்கு கட்டாய லீவ்’.. 6,000 பேர் ‘பணிநீக்கம்’.. ஊழியர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த நிறுவனத்தின் CEO..!