75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. அலைமோதிய கூட்டம்.. பிரியாணியுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பைசாவுக்கு பிரியாணியை விற்பனை செய்திருக்கிறது உணவகம் ஒன்று. இதையடுத்து ஏராளமான மக்கள் பிரியாணி வாங்க அந்த கடையில் குவிந்திருக்கிறார்கள்.

Advertising
>
Advertising

Also Read | ஒரு நொடில வானிலை மாறிடுமாம்.. மக்களை திகைக்க வைக்கும் வானவில் மலை.. பின்னாடி இருக்கும் சுவாரஸ்ய உண்மை.. !

75வது சுதந்திர தின விழா

இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தின விழா நேற்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியா முழுவதும் பல்வேறு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்ட நிலையில், முதன் முறையாக ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் மூவர்ண கொடியை ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மக்கள் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.

பிரியாணி ஆஃபர்

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டையில் இயங்கி வரும் உணவகம் ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, 75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக முதலில் வரும் 75 பேருக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த போஸ்டர்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவவே, பொதுமக்கள் பலரும் நேற்று பிரியாணி வாங்க இந்த கடையின் முன்னால் குவிந்தனர்.

50 பைசா மற்றும் 25 பைசாவை எடுத்துக்கொண்டு காத்திருந்த மக்களிடம் காசுகளை பெற்றுக்கொண்டு சிறப்பு பிரியாணி டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து, டோக்கன் பெற்ற 75 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டிருக்கிறது.

அலைமோதிய கூட்டம்

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை வித்தியாசமாக கொண்டாடும் நோக்கில் இந்த சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள காலை முதலே கடையின் வாசலில் மக்கள் குவிந்தனர். ஆர்வத்தோடு காத்திருந்த மக்களிடையே முதலில் டோக்கன் பெற்ற 75 பேருக்கு மட்டுமே பிரியாணி கிடைத்தது. இருப்பினும், சிலருக்கு டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். இந்த அறிவிப்பின் காரணமாக அந்த பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.

Also Read | ஒரேயொரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. 50 மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான பெண்.. குழம்பிப்போன அதிகாரிகள்.!

CHICKEN BRIYANI, 75 PAISA, 75TH INDEPENDENCE DAY, சிக்கன் பிரியாணி, 75வது சுதந்திர தின விழா, 75 பைசா

மற்ற செய்திகள்