Chess Olympiad 2022 : அந்தரத்தில்.. மிதந்த படி ஒலித்த பியானோ இசை.. பிரம்மிக்க வைத்த இசைக் கலைஞர்.. வைரலாகும் வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மகாபலிபுரத்தில் வைத்து கடந்த ஜூலை மாதம், 28 ஆம் தேதி, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆரம்பமானது.
மேலும், இதன் தொடக்க விழாவில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும், பல பிரம்மாண்ட நிகழ்ச்சிகளும் நடந்திருந்தன.
இத்தனை நாட்கள் மிக சிறப்பாக நடந்து வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இன்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை (09.08.2022) நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ரவி, செஸ் விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவை போல, இன்றும் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தது. இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் உள்ளிட்டோர் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தனர். இதில், டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் டிரம்ஸ் வாசித்த நிகழ்வு, இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்; இன்றைய நிகழ்ச்சியில் அந்தரத்தில் பறந்த படி, இசை கலைஞர் ஒருவர் பியானோவை வாசித்த நிகழ்வு, பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பியானோ இசை கலைஞரான வெளிநாட்டு பெண் ஒருவர், அந்தரத்தில் பறந்த படி, பியானோவை இசைக்க அங்கிருந்த அனைவரும், ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.
இது தொடர்பான வீடியோவும், இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரையும் இந்த வீடியோ மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
உலகின் அபூர்வமான 'மயில் சிலந்தி'.. பார்க்க தான் அழகா இருக்கும்.. கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதானாம்..!
தொடர்புடைய செய்திகள்
- "வருஷத்துக்கு 10 கோடி பேர்".. சென்னையின் புதிய ஏர்போர்ட்-ல் அமைய இருக்கும் விசேஷங்கள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை..!
- ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் “செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகள்”
- "பேசுறதுக்கு Prepare பண்ணது எல்லாம் வேஸ்ட்டா போச்சே.." பட்டமளிப்பு விழாவில் கலகலப்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின்
- "என்ட பேரு ஸ்டாலின்" - இவ்ளோ அழகா மலையாளத்தில் சம்சாரிக்குறாரே... ட்ரெண்ட் ஆகும் முதல்வரின் பேச்சு
- "மேலிட உத்தரவுக்கு வெயிட் பண்ணாம உடனடியா ஆக்ஷன் எடுங்க".. போலீஸ் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!
- "நாடு முழுவதும் இந்த திட்டம் சட்டமாகணும்" திருமண விழாவில் விருப்பத்தை உடைத்து சொன்ன முதல்வர்..!
- வீட்டை காலி பண்ண சொன்ன ஓனர்.. சிறுவன் அப்துல் கலாமுக்கு.. முதல்வரிடம் இருந்து வந்த சூப்பர் சர்ப்ரைஸ்!
- அமைச்சர் சொன்னது முற்றிலும் தவறு.. வீடியோ வெளியிட்டு பொங்கி எழுந்த வ.உ.சி குடும்பம்.. முழு தகவல்
- பள்ளிகள் திறப்பு.. தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் மிகப்பெரிய லாக்டவுன் தளர்வுகள்.. என்னென்ன? விவரம்
- வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரண்டு குட்நியூஸ்