‘அடேங்கப்பா..!’ முதல் சுற்றிலேயே இவ்வளவு வாக்கு முன்னிலையா..! ஆரம்பமே ‘அதிரடி’ காட்டிய உதயநிதி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 133 இடங்களிலும், அதிமுக 100 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.  ஸ்டார் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இதில் முதல் சுற்று நிலவரப்படி உதயநிதி ஸ்டாலின் 3933 வாக்குகளும், பாமக வேட்பாளர் கசாலி 652 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் முதல் சுற்றிலேயே 3281 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்று வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்