‘பெண் புள்ளிங்கோக்களுக்கும் பாரபட்சம் பாக்கல!’ ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை விதவிதமாய் கவனித்த காவல்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்குக்கு கட்டுப்படாமல் ஊர் சுற்றுவதில் ஆண்களுக்கு போட்டியாக இருசக்கர வாகனத்தில் வலம் வந்த இளம் பெண்களையும் பாரபட்சமின்றி காவல்துறை சிறப்பாக கவனித்துள்ளது.

சென்னை பாடி அருகே நடைபெற்ற வாகன சோதனையின்போது சிக்கிய இரு பெண் புள்ளிங்கோக்களை பாரபட்சமில்லாமல் வெயிலில் நிற்க வைத்து கொரோனா எதிர்ப்பு உறுதிமொழி கூறும் தண்டனையை ஏற்க வைத்துள்ளனர் நம்மூர் போலீசார். இதனை அடுத்து பட்டாபிராம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வீணாய் சுற்றியவர்களை அழைத்து வந்த போலீசார், அவர்களுக்கு உற்சாகமாக உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்தனர்.

இதேபோல் மாங்காடு, ஆவடி, நசரத்பேட்டை பஜார், பூந்தமல்லி சாலை என பல இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் வீட்டிற்குள் முடங்கிக் இருக்காமல் ஊர் சுற்றி வந்த பல கருஞ்சிறுத்தைகளும், சிங்கிள் சிங்கங்களும் முரட்டுக் காளைகளும் போலீஸாரால் கவனிக்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வைப் பற்றி அறிந்துகொண்டு சென்றனர்.

CORONAVIRUS, CORONA, CHENNAI, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்