தோழியுடன் ரம்ஜான் விருந்துக்கு சென்ற நபர் செஞ்ச காரியம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ரம்ஜான் விருந்துக்கு அழைத்தவர் வீட்டில் நூதன முறையில் நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertising
>
Advertising

Also Read |  ‘என்ன இப்படியெல்லாம் அடிக்குறாரு’.. ஒரே ஷாட்டில் SRH-ஐ மிரள வைத்த டேவிட் வார்னர்..!

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் தாட்சாயணி (வயது 34). இவர் நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது நகை கடையில் பணிபுரியும் மேலாளர் சாரா என்பவரை விருந்துக்கு வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது, சாரா தனது நண்பர் சையத் முகமது அபுபக்கர் என்பவரையும் உடன் அழைத்து வந்துள்ளார். இருவரும் தாட்சாயணி வீட்டில் பிரியாணி விருந்து சாப்பிட்டு சென்றனர்.

இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதை கண்டு தாட்சாயணி அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வைர செயின்கள் காணாமல் போனது தெரியவந்தது. வீடு முழுவதும் தேடியும் கிடைக்காததால், கடைசியாக வீட்டுக்கு விருந்துக்கு வந்து சென்ற தனது மேலாளர் சாராவுடன் வந்த முகமது அபுபக்கர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முகமது அபுபக்கர் நகையை திருடி விழுங்கி விட்டு, பிரியாணி விருந்தையும் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் நகைகள் இருப்பது தெரியவந்தது. இனிமா கொடுத்து நகைகள் வெளியே வர வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். ஆனால் நகைகள் வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று முகமது அபுபக்கர் இயற்கை உபாதை கழிக்கும் போது விழுங்கிய நகைகள் வெளியே வந்தது. இதனை அடுத்து, அந்த நகைகள் சுத்தம் செய்யப்பட்டு தாட்சாயிணியிடம் ஒப்படைக்கப்பட்டது. ரம்ஜான் விருந்துக்கு சென்றவர் வீட்டில் நகையை திருடி விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CHENNAI, YOUTH, STEALS, JEWELRY, FRIENDS HOUSE, ரம்ஜான் விருந்து, சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்