ஆச ஆசையா 'ஃபோன்' ஆர்டர் பண்ணி,,.. பார்சல 'ஓப்பன்' பண்ணதுல,,.. வாலிபருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் முன்னணி ஆன்லைன் வணிகத்தின் மூலம் மோட்டோரோலா செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஆச ஆசையா 'ஃபோன்' ஆர்டர் பண்ணி,,.. பார்சல 'ஓப்பன்' பண்ணதுல,,.. வாலிபருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!

சில தினங்களுக்கு முன், இவரது முகவரிக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த அந்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்த பார்சலில் அவர் ஆர்டர் செய்த மோட்டோரோலா செல்போனுக்கு பதிலாக துணி துவைக்கும் சோப்புகள் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக, அவர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, பார்சல் பாக்சில் இருந்த ஸ்டிக்கர், பார்சலில் இருந்த ரசீது உள்ளிட்ட விவரங்களையும் இ மெயில் மூலம் அனுப்பியுள்ளார். இருந்த போதும், இதுவரை அவருக்கு செல்போன் செலுத்திய தொகையோ, அல்லது மாற்று செல்போனோ எதுவும் வழங்கவில்லை என அந்த வாலிபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக, தற்போது கடைகள் எதுவும் செயல்படாத நிலையில், ஆன்லைன் மூலம் தற்போது அதிகம் வணிகம் நடைபெற்று வருகிறது. இத்தகைய காலகட்டங்களில், ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் பொருட்கள் இது போன்று மாறி வழங்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்